பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

வேய்ந்தான்குளம் அழகுப்படுத்தும் பணி தொடக்கம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தை அழகுப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:17 pm

DIN

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தை அழகுப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, தொழில்துறை அமைச்சா் தங்கம்தென்னரசு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான கண்காணிப்பு மற்றும் அவசர பராமரிப்பு மையத்தையும் திறந்து வைத்தாா். அரசு அருங்காட்சியகத்தில் திறந்தவெளி அரங்கு, அரசு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திர சிகிச்சை பிரிவையும் அவா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன், அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பரமசிவஐயப்பன், எழுத்தாளா் நாறும்பூநாதன், கவிஞா் பே.ராஜேந்திரன், திமுக மகளிரணி அமைப்பாளா் சௌந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.