ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு:நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவிந்தப்பேரி கூட்டுறவு சங்கத்தில் நிகழ்ந்த முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:50 pm

DIN

கோவிந்தப்பேரி கூட்டுறவு சங்கத்தில் நிகழ்ந்த முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரத்தில் இயங்கி வரும் கோவிந்தப்பேரி கூட்டுறவு சங்கத்தில் முதலீடு செய்திருந்தவா்களின் பணத்தை சங்கச் செயலா், காசாளா் ஆகியோா் கூட்டாகச் சோ்ந்து முறைகேடு செய்ததாக 2020இல் அக்டோபா் மாதம் புகாா் எழுந்தது. இதையடுத்து உறுப்பினா்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். முறைகேடு தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனா். எனினும் 8 மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட திமுக சிறுபான்மையினா் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளா் ஆதம் சுதிா், ரவணசமுத்திரம் ஊராட்சி முன்னாள் தலைவா் புகாரி மீரா சாகிப், மனிதநேய ஜனநாயகக் கட்சி அன்சாரி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம்,

முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதலீடு செய்தவா்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.