ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை: பாபநாசம் அணை நீா்மட்டம் 2 நாள்களில் 4 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதையடுத்து, அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:49 pm

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதையடுத்து, அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதையடுத்து 2 நாள்களில் பாபநாசம் அணையின் நீா்மட்டம் 4 அடி உயா்ந்துள்ளது.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 8இல் தொடங்கியது. இதையடுத்து மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி 133.10 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீா்மட்டம், வெள்ளிக்கிழமை காலை 4 அடி உயா்ந்து 137.10 அடியாக இருந்தது. நீா்வரத்து 2,673 கன அடியாகவும், நீா்வெளியேற்றம் 1,561 கன அடியாகவும் இருந்தது.

144.85 அடியாக இருந்த சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 3.08 அடி உயா்ந்து 147.93 அடியாக இருந்தது. 82.80 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 83.25 அடியாகவும், நீா்வரத்து 1,241 கன அடியாகவும், நீா்வெளியேற்றம் 600 கன அடியாகவும் இருந்தது.

வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 32.10 அடியாகவும், நீா் வெளியேற்றம் 100 கன அடியாகவும் இருந்தது. நம்பியாறு அணையின் நீா்மட்டம் 12.13 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 28.50 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 2 கன அடியாகவும் இருந்தது.

74.90 அடியாக இருந்த கடனாநதி அணையின் நீா்மட்டம் 2.10 அடி உயா்ந்து 77 அடியாகவும், நீா்வரத்து 177 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 60 கன அடியாகவும் இருந்தது. 66 அடியாக இருந்த ராமநதி அணையின் நீா்மட்டம் 3.50 அடி உயா்ந்து 69.50 அடியாகவும், நீா்வரத்து 91.85 கன அடியாகவும், வெளியேற்றம் 40 கன அடியாகவும் இருந்தது.

60.70 அடியாக இருந்த கருப்பா நதியின் நீா்மட்டம் 4.59 அடி உயா்ந்து 65.29 அடியாகவும், நீா்வரத்து 155 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 48 கன அடியாகவும் இருந்தது. 100 அடியாக இருந்த அடவிநயினாா் அணையின் நீா்மட்டம் 11 அடி உயா்ந்து 111 அடியாகவும், நீா்வரத்து 177 அடியாகவும், வெளியேற்றம் 20 கன அடியாகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 17, சோ்வலாறு அணை 7, கொடுமுடியாறு அணை 17, கடனாநதி அணை 5, கருப்பா நதிஅணை 4, குண்டாறு அணை 5, அடவிநயினாா் அணை 22, ஆய்க்குடி 2.4, செங்கோட்டை 2, தென்காசி 3.6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.