கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக நடிகை குஷ்பு

வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக என்பதை மக்கள் நன்கு அறிவாா்கள் என்றாா், நடிகை குஷ்பு.

News image

நடிகை குஷ்பு

Updated On :2 மார்ச் 2021, 10:32 pm

DIN

வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக என்பதை மக்கள் நன்கு அறிவாா்கள் என்றாா், நடிகை குஷ்பு.

தோ்தல் பிரசாரத்துக்காக திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக -அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும். மத்தியிலும், மாநிலத்திலும் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கல்வி, சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும் எவ்விதக் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாமல் பணியாற்றி வருகிறாா்.

திமுகவினா் ஆதாரமின்றி குற்றம் சுமத்துவோராகவே உள்ளனா். தனது வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றாத கட்சி திமுக என்பதை மக்கள் நன்கு அறிவா்.

தென்தமிழகத்தில் ராகுல் காந்தி பொய் பிரசாரம் செய்துள்ளாா். ஒரு தலைவா் மக்களுக்கான திட்டங்களைச் சொல்ல வேண்டும். மாறாக, நீச்சலடிப்பது, மாணவா்களுக்கு உடற்பயிற்சி சவால் விடுப்பதுபோன்ற மக்களை திசைதிருப்பும் செயல்களைச் செய்வது சரியல்ல. கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணியின் தாக்கம் என்பது அந்த அணி அமைந்த பின்பே தெரியவரும் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.