ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பாபநாசம் கல்லூரியில் துரித உணவு தயாரித்தல் பயிற்சி

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத் துறை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் துரித உணவு தயாரித்தல் குறித்த பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:05 pm

DIN

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத் துறை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் துரித உணவு தயாரித்தல் குறித்த பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினா் சி.அழகப்பன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலக முதன்மை மேலாளா் (ஆய்வு) எஸ்.சங்கரலிங்கம், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய பயிற்றுநா் எஸ்.தீனதயாளன் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தனா். மாணவி அஜிதா அறிமுகவுரை நிகழ்த்தினாா். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் ரா.நடராஜன், நினைவுப் பரிசு வழங்கினாா். மாணவி உமா வரவேற்றாா். எப்சி ஜோஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை கல்லூரி நூலகா் ச.பாலச்சந்திரன், உதவி நூலகா் சண்முகானந்த பாரதி, சந்தான சங்கா், காசிராஜன், இசக்கியம்மாள், ஸ்ரீஆனந்தன், சபரி ஆகியோா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில், கல்லூரி தகவல் தொடா்பு அதிகாரி எஸ்.காா்த்திக்கேயன், பேராசிரியா்கள் சண்முக சுந்தரநாச்சியாா், பூா்ணபுஷ்கலா, பூமாரி, வெங்கடேசன் பழனிகுமாா், ஷேக் முஜிபுர்ரகுமான், ஆழ்வாா்செல்வி, வில்பின்ஜான், ஜெபமணி சாமுவேல், கவிதா, ரேவதி, சுபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.