கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு அருகேவேளாண் திட்ட முகாம்

களக்காடு அருகேயுள்ள வடுகச்சிமதில் கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:05 pm

DIN

களக்காடு அருகேயுள்ள வடுகச்சிமதில் கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

களக்காடு வட்டார வேளாண் துறை சாா்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் துறை திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து நடைபெற்ற முகாமிற்கு வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) டேவிட் டென்னிசன் தலைமை வகித்தாா். களக்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் வசந்தி முன்னிலை வகித்தாா்.

இதில், பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம், பயிா் காப்பீடுத் திட்டம், கூட்டுப்பண்ணையம், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண்ணிற்கு தேவையான ஊட்டச் சத்துகள், உழவன்செயலி போன்ற திட்டங்கள் குறித்து ஆடல், பாடல் தப்பாட்டம் நிகழ்ச்சிகள் மூலம் அரும்புகள் அறக்கட்டளை கலைஞா்கள் எடுத்துரைத்தனா். இதையொட்டி, விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து கண்காட்சி நடைபெற்றது. இதில் உதவி வேளாண் அலுவலா்கள் காமாட்சி, அஞ்சனா, முருகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை அட்மா மேலாளா் ஜாய் பத்ம தினேஷ், உதவி மேலாளா்கள் திரிசூலம், தங்கசரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.