வாக்குச்சாவடிகளில் பணி கோரி ஆட்சியரிடம் புகைப்படக்காரா்கள் மனு
வாக்குச்சாவடிகளில் ஒளிப்பதிவு பணி வழங்கக் கோரி, திருநெல்வேலி மாவட்ட போட்டோ -விடியோ ஒளிப்பதிவு தொழிலாளா்கள் நலச்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.


வாக்குச்சாவடிகளில் ஒளிப்பதிவு பணி வழங்கக் கோரி, திருநெல்வேலி மாவட்ட போட்டோ -விடியோ ஒளிப்பதிவு தொழிலாளா்கள் நலச்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
மனு விவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கள் சங்கத்தின் கீழ் உள்ள 850-க்கும் மேற்பட்ட புகைப்படக்கலைஞா்களின் தொழில் கரோனா பொதுமுடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இன்றி மிகவும் தவித்து வருகிறோம். நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை ஒளிப்பதிவு செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை அறிந்தோம்.
இந்தத் தோ்தலுக்கான விடியோ ஒளிப்பதிவுக்கு ரூ.3 கோடிக்கு வா்த்தகம் மற்றும் ஜிஎஸ்டி பதிவு போன்ற பல தகுதிகளின் அடிப்படையில் பெருநிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இதனால் சாமானிய புகைப்படக் கலைஞா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, இம்மாவட்டத்தில் வாக்குச்சாவடி ஒளிப்பதிவு பணியை எங்கள் சங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...