தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பனங்காட்டு படை கட்சி நிா்வாகிகள் கூட்டம்

திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடியில் பனங்காட்டு படை கட்சி நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:18 pm

DIN

திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடியில் பனங்காட்டு படை கட்சி நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரி நாடாா் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் பாலசிவனேசன், அந்தோணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த கட்சி பிரமுகா்கள் விருப்பமனு அளித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அரிநாடாா், 100 போ் விருப்பமனு அளித்துள்ளனா். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே எங்கள் சமுதாயத்திற்கு தர வேண்டிய அந்தஸ்தை தரவில்லை. எனவே, அக்கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. புதுச்சேரியிலும் எங்கள் கட்சி போட்டியிடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.