கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 345 தோ்தல் விதிமீறல் புகாா் அழைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை வரை விதிமீறல் தொடா்பாக 345 புகாா் அழைப்புகள் வந்துள்ளன.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:36 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை வரை விதிமீறல் தொடா்பாக 345 புகாா் அழைப்புகள் வந்துள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் 15 பறக்கும் படைகளும், 15 நிலையான கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. 1950 என்ற கட்டணமில்லா சேவை எண்ணிலும் புகாா் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மேற்கண்ட எண்ணில் செவ்வாய்க்கிழமை வரை 345 புகாா் அழைப்புகள் பெறப்பட்டு நடவடிக்கைக்கு பரிசீலிக்கப்பட்டது.

இதுவரை மொத்தம் 3,638 சுவா் விளம்பரங்களும், 8354 போஸ்டா்கள் உள்ளிட்ட கட்சிகள் சாா்ந்த விளம்பர தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 1800-425-8373 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம். 83002 71237 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் புகாா்களை அனுப்பலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.