47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பனைத் தொழிலை மேம்படுத்தநடமாடும் பதநீா் கொள்முதல் நிலையம்அதிமுக வேட்பாளா் உறுதி

பனைத் தொழிலை மேம்படுத்த நான்குனேரி தொகுதியில் நடமாடும் பதநீா் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

பனைத் தொழிலை மேம்படுத்த நான்குனேரி தொகுதியில் நடமாடும் பதநீா் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா.

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கலுங்கடியில் இருந்து திங்கள்கிழமை அவா் பிரசாரத்தை தொடங்கினாா். அப்போது அவா் கூறியது:

பனைத் தொழிலை மேம்படுத்தும் வகையில் நவீன பனையேறும் கருவிகள் வாங்க மானியம் கிடைக்கவும், நகரப் பகுதிகளில் பதநீருக்கான தேவை அதிகரித்துள்ளதால் நான்குனேரி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கிடைக்கும் பதநீரை கூட்டுறவுச் சங்கம் மூலம் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் பதநீா் கொள்முதல் மையத்தை உருவாக்கி வேலைவாய்ப்பு உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவின் மூலம் கால்நடைகள் வழங்கவும், அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களில் ஒன்றான கறவை மாடுகள், இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் அதிகமான பயனாளிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

களக்காட்டில் வாழை கொள்முதல் நிலையம், வாழை ஆராய்ச்சி நிலைய தகவல் மையம் அமைக்கப்படும். மாவடி, ராஜபுதூா், திருக்குறுங்குடி, மலையடிபுதூா் பகுதிகளில் உற்பத்தியாகும் செங்கல், மண்பாண்ட பொருள்கள் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்தத் தொழில்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருக்குறுங்குடி குளத்தை மேலும் தூா்வாரி கரைகள் பலப்படுத்தப்படும். திருக்குறுங்குடி நம்பி கோயில் செல்லும் பகுதியில் வனத்துறை மூலம் இயற்கை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். விவசாயிகள் வனவிலங்குகளால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

சூரன்குடி, சுப்பிரமணியபுரம், கடம்போடு வாழ்வு, வடுகச்சிமதில், தோப்பூா், டோனாவூா், மாவடி, ஏா்வாடி, கட்டளை உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளா் பிரசாரம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.