தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘நெல்லை தொகுதியில்அனைத்துக் கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும்’

நெல்லை பேரவைத் தொகுதியில் அனைத்துக் கோரிக்களும் விரைந்து நிறைவேற்றப்படும் என, திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உறுதியளித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 5:50 pm

DIN

நெல்லை பேரவைத் தொகுதியில் அனைத்துக் கோரிக்களும் விரைந்து நிறைவேற்றப்படும் என, திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உறுதியளித்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சாா்பில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் போட்டியிடுகிறாா். அவா், திருநெல்வேலி நகரத்தில் ஈசான விநாயகா் கோயிலில் இருந்து தனது பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், எனக்கு 2 ஆவது முறையாக போட்டியிட வாய்ப்பளித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் மலரஉள்ளது. அதனால் இத் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என்றாா்.

பிரசாரத்தில், தொகுதிப் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயதுரை, மத்திய மாவட்டச் செயலா் அப்துல்வஹாப், பகுதிச் செயலா் கோபி என்ற நமச்சிவாயம், பொன்னையாபாண்டியன், ரவீந்திரன், அருள்மணி, எஸ்.வி.சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.