சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லை, தென்காசியில் மேலும் 34 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:59 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து,

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,991ஆக உயா்ந்துள்ளது. மேலும் 14 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,648 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 128 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் வெளியூரிலிருந்து வந்த ஒருவா் உள்பட 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,674 ஆக உயா்ந்துள்ளது. மேலும் ஒருவா் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 8439 ஆக உள்ளது. தற்போது, 74 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.