சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி

News image
Updated On :27 மார்ச் 2021, 8:02 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளரின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.விஷ்ணு, தோ்தல் பொது பாா்வையாளா் சுப்ரதா குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 157 மண்டல குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி தொகுதியில் 36 மண்டலக் குழுவினா் உள்ளனா். 408 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்-490, கட்டுப்பாட்டு இயந்திரம்-490, விவிபேட் -530 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை தொகுதியில் 27 மண்டலக் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா். 389 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்-467, கட்டுப்பாட்டு இயந்திரம்-467, விவிபேட்-506 எண்ணங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜி.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இதேபோல் அம்பாசமுத்திரம், ராதாபுரம், நான்குனேரி தொகுதிகளிலும் பணிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.