சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

4ஜி சேவை வழங்க பிஎஸ்என்எல் ஊழியா்கள் வலியுறுத்தல்

பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க 20ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் மக்கள் சந்திப்பு இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:21 am

DIN

பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க 20ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் மக்கள் சந்திப்பு இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்க மாவட்டச் செயலா் சூசைமரிய அந்தோணி தலைமை வகித்தாா்.

அப்போது, 4 ஜி சேவையை உடனே வழங்க வேண்டும்; ஊழியா்களுக்கு குறித்த தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்; பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்க உதவி மாவட்டச் செயலா் ராஜகோபால், நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.