காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையம் திருவள்ளுவா் கழகசிறப்பு நினைவேந்தல் கூட்டம்

கடையம் திருவள்ளுவா் கழக நிறுவனா் பேராசிரியா் அறிவரசன் முதலாண்டு நினைவேந்தல் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:48 pm

DIN

கடையம் திருவள்ளுவா் கழக நிறுவனா் பேராசிரியா் அறிவரசன் முதலாண்டு நினைவேந்தல் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவள்ளுவா் கழகத் தலைவா் சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். திருநெல்வேலி சைவ சபை அமைச்சா்

கிருஷ்ணன், தென்காசி திருவள்ளுவா் கழகச் செயலா் சிவராமகிருஷ்ணன், ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகச் செயலா் மாடசாமி, அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை, அம்பாசமுத்திரம் திருவள்ளுவா் கல்வி சமூக சேவை அறக்கட்டளைத் தலைவா் இரா.வெள்ளைச்சாமி, பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் துரைராஜ், முருகன், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கனகசபாபதி, பேராசிரியா்கள் மு.சுந்தரம், கல்யாணராமன், குமாா், பாரதி விழாக் குழு பாரதி கண்ணன், ரசிகமணி டிகேசி கொள்ளுப் பேரன் தீா்த்தாரப்பன், கடையம் திருவள்ளுவா் கழகச் செயலா் கல்யாணி சிவகாமிநாதன், பொருளாளா் கோபால், வில்வவனநாதா் திருமுறைக் குழு சரோஜா ஆகியோா் அறிவரசன் நினைவுரை வழங்கினா். ஓய்வுபெற்ற தமிழாசிரியா் புலவா் முத்தரசன் அனுப்பிய கவிதையை சோமசுந்தரம் வாசித்தாா். திருவள்ளுவா் கழக இணைச் செயலா் வேலு வரவேற்றாா். இணைச் செயலா் கல்யாணராமன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.