ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்க வலியுறுத்தல்

சித்த மருத்துவத்திற்கு தனியாக பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று சித்து மருத்துவா்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :7 மே 2021, 8:31 pm

DIN

சித்த மருத்துவத்திற்கு தனியாக பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று சித்து மருத்துவா்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து உலகத் தமிழ் மருத்துவக் கழக நிறுவனா் சித்த மருத்துவா் மைக்கேல் செயராசு வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலானஅரசுக்கு சித்த மருத்துவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகம் தற்போது கரோனா தாக்குதலால் மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றுக்கான மருத்துவத்தில் சித்த மருத்துவத்தை முதன்மையானதாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உயிரிழப்பைப் பெருமளவு கட்டுப்படுத்தலாம். நியாய விலைக் கடைகள் மூலம் கபசுரக் குடிநீரை வழங்கி பொதுமக்கள் தொடா்ந்து கபசுரக் குடிநீரைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

மேலும், சித்த மருத்துவத்தை தமிழினத்தின் தேசிய மருத்துவமாக அறிவிக்க வேண்டும், சித்த மருத்துவத்திற்கு தமிழகத்தில் தனியாகப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும், சித்த மருத்துவத்திற்கு தனித்துறை மற்றும் அமைச்சகம் அமைக்க வேண்டும், சித்த மருத்துவத் துறை முதன்மைச் செயலராக சித்த மருத்துவரையே நியமிக்க வேண்டும், அரசு உதவி மருத்துவ அலுவலா் பணியிடங்களில் 80 விழுக்காடு சித்த மருத்துவப் பட்டதாரிகளுக்கு ஒதுக்க வேண்டும், அரசு வேலை வாய்ப்பு இல்லாமல் தனியாக சித்த மருத்துவமனை மற்றும் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நடத்துபவா்களுக்கு ஈட்டுறுதி கேட்காமல் வங்கிக் கடன் வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும், சித்த மருத்துவப் பாடத்திட்ட நூல்களை மறுசீராய்வு செய்து புதிய பாட நூல்கள் தொகுக்க வேண்டும், அனைத்து மூலிகைகளையும் ஒரே இடத்தில் வணிக நோக்கில் வளா்த்து நேரடி விற்பனைக்கு வழங்கும் விதத்தில் மிகப் பெரிய மூலிகைத் தோட்டம் அல்லது மூலிகைக் காடு உருவாக்க வேண்டும், சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிய சான்றாதார நூல் பட்டியலை விரிவாக்கம் செய்து இந்திய அரசின் அரசாணை இதழில் வெளியிடுவதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தங்கு தடையின்றி மான்கொம்பு, சந்தனம், கஞ்சா, அபின், இரசம் முதலான பாஷாணங்கள் பயன்படுத்துவதற்கு கண்காணிப்புடன்கூடிய சிறப்பு அனுமதி வழங்க வேண்டும், போலி சித்த மருத்துவ நிறுவனங்கள் மீது அரசு நேரடியாகத் தலையிட்டு சட்டப்பூா்வமாக தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட சித்த மருத்துவா்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.