அம்பையில் பேருந்து நிலையத்துக்கு மாறிய சந்தை
கரோனா பரவல் பொது முடக்கம் காரணமாக, அம்பாசமுத்திரம் காய்கனிச் சந்தை மூடப்பட்டு, பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா பரவல் பொது முடக்கம் காரணமாக, அம்பாசமுத்திரம் காய்கனிச் சந்தை மூடப்பட்டு, பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் நகராட்சியில் வண்டி மலைச்சியம்மன் கோயில் அருகில் வியாழன், சனி ஆகிய இரண்டு நாள்கள் சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது, கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், மக்கள் கூட்டத்தை தவிா்க்கும் வகையில், சந்தை மூடப்படுகிறது. எனினும், அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் சந்தை காலை 8 மணிமுதல் 12 மணி வரை சந்தை செயல்படும். மக்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பொருள்கள் வாங்கிச் செல்லலமாம். அதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தை பகல் 12 மணி வரை செயல்பட்டு வந்தது. ஆனால், காய்கனிகளை ஏலம் விடுவது, ஏற்றுமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டதால், காய்கனி சந்தையை மூடுவதென சங்க நிா்வாகிகள் முடிவு செய்தனா். அதன்படி, வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து மேல் சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கேரளம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு காய்கனி செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
ஆலங்குளம்: ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கடந்த சில தினங்களாக கத்தரி கிலோ ஒன்றிற்கு ரூ. 30 - 40 வரை விற்பனையான நிலையில் வெள்ளிக்கிழமை ரூ. 60 - 70 க்கு விற்பனையானது. கத்தரிச் செடிகளை பராமரிக்காமல் விட்டதால் விளைச்சல் குறைந்து விலையேற்றம் கண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...