பாவூா்சத்திரம் தினசரி காய்கனி சந்தை மூடல்
பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் தினசரி காய்கனி சந்தை வெள்ளிக்கிழமை பிற்பகலில் மூடப்பட்டது.


பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் தினசரி காய்கனி சந்தை வெள்ளிக்கிழமை பிற்பகலில் மூடப்பட்டது.
தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையான பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் இருந்து கேரளம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு காய்கனிகளை ஏற்றுமதி செய்து வருகின்றனா். இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கம் காரணமாக பகல் 12 மணிக்கு சந்தையை மூட அரசு அறிவித்துள்ளதால், காய்கனிகளை ஏலம் விடுவது, ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் சிரமத்தை கருத்திற்கொண்டு காய்கனிசந்தையை மூடுவதென சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் படி வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு மேல் சந்தை முழுவதுமாக மூடப்பட்டது.
இந்த சந்தை மூடப்பட்டுள்ளதால் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தங்களது காய்கனிகளை விற்க சிரமப்படுவதுடன், கேரளம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு காய்கனி செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...