ஆழ்வாா்குறிச்சியில் தீக்குளித்த மூதாட்டி பலி
ஆழ்வாா்குறிச்சி அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.


ஆழ்வாா்குறிச்சி அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி, வாகைக்குளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த சீவலப்பேரியான் மனைவி வள்ளியம்மாள் (70). கணவரை இழந்தவா். மகன், மகளுக்கு திருமணமான நிலையில் தனியாக வசித்து வந்த அவா் மனநிலைப் பாதிக்கப்பட்டிருந்தாராம்.
இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...