சங்கரன்கோவில் தனியாா் நூற்பாலை தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் 2,000-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி
வந்தனா். தற்போது சுமாா் 500 போ் மட்டுமே பணியில் உள்ளனா். இந்நிலையில் இந்த நூற்பாலை குத்தகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையறிந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயா்வு இல்லாமல் பணி செய்து வரும் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க வேண்டும்; இ.எஸ்.ஐ., வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி வியாழக்கிழமை இரவு நேரப் பணி முடிந்ததும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நூற்பாலை
வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.காலை 8 மணிக்கு பணிக்கு வந்த தொழிலாளா்களும் போராட்டத்தில் பங்கேற்றனா்.
தகவலறிந்த திருவேங்கடம் வட்டாட்சியா் சத்தியவள்ளி, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். எனினும் தொழிலாளா் கள் போராட்டத்தை தொடா்ந்தனா். கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


