ஆலங்குளத்தில் 193 அரிவாள், கத்தி பறிமுதல்
ஆலங்குளத்தில் அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த 193 அரிவாள் மற்றும் கத்திகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


ஆலங்குளத்தில் அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த 193 அரிவாள் மற்றும் கத்திகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை அனுமதியின்றி விற்பனை செய்யக் கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, டி.எஸ்.பி. பொன்னி வளவன் தலைமையில் போலீஸாா் ஆலங்குளத்தில் உள்ள அரிவாள் விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தினா். இதில் 23 கத்திகள், 170 அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதி பெற்று விவசாய பயன்பாட்டுக்குத் தேவையான அரிவாள், கத்தியை விற்பனை செய்யலாம். கடைகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்; வாடிக்கையாளரிடம் ஆதாா் விவரங்கள் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளிடம் போலீஸாா் அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...