சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

என்.ஜி.ஓ. காலனி பெரியகுளம் பராமரிப்பு குழு கூட்டம்

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பெரியகுளம் பராமரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:37 pm

DIN

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பெரியகுளம் பராமரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையம் மண்டலத்துக்குள்பட்ட 27 ஆவது வாா்டு பகுதியில் பெரியகுளம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப ஆலோசனையின்பேரில், பொதுமக்களின் பங்களிப்போடு பெரியகுளம் அண்மையில் தூா்வாரி பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், குளத்தின் கரைகளை பேணும் நடவடிக்கை, நீா் வரத்து கால்வாய்கள் பராமரிப்பு உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்க பராமரிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். செயலா் வெள்ளையன் வரவேற்றாா். பொருளாளா் கோபாலகிருஷ்ணன் அறிக்கை வாசித்தாா்.

குளத்தின் உள் பகுதிக்கு வரும் நீா்வரத்து பாதை நான்கிலும் கல்வெட்டு அமைத்து தர மாநகராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்துவது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் சாமி நல்லபெருமாள், ஆலோசகா்கள் பி.டி.சிதம்பரம், சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.