சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு!
சென்னை மாவட்டத்தில் 6 திமுக எம்எல்ஏகளுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின்.
சென்னை மாவட்டத்தில் 6 திமுக எம்எல்ஏகளுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தி.நகர் கருணாநிதி, அண்ணா நகர் மோகன், வில்லிவாக்கம் வெற்றியழகன் ஆகியோருக்குப் பதிலாக புதுமுகங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ராயபுரம் ஐட்ரீம் மூர்த்தி, திரு.வி.க. நகர் தாயகம் கவி மற்றும் எழும்பூர் பரந்தாமன் ஆகியோருக்கும் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என பரபரப்பைக் கூட்டி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதிகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, திமுக சார்பில் போட்டியிடும் 164 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலையும் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...