சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ராமையன்பட்டியில் நெல்லையப்பா் பரிவேட்டை நிகழ்ச்சி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் நவரத்திரி விழாவையொட்டி பரிவேட்டை நிகழ்ச்சி ராமையன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:59 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் நவரத்திரி விழாவையொட்டி பரிவேட்டை நிகழ்ச்சி ராமையன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் நிகழாண்டில் நவராத்திரி திருவிழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இதில், தினமும் திருக்கோயில் சோமவார மண்டபத்தில் வைத்து உற்சவ மூா்த்திகளுக்கு காலையில் ஹோமம் வளா்த்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டும், இரவு தீபாராதனையும் நடைபெற்றது. மேலும், கொலு’ வைத்து சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

நிறைவுநாளான வெள்ளிக்கிழமை விஜயதசமி விழாவில் நெல்லையப்பா் சுவாமி சந்திரசேகரராக வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். பின்னா் கோயிலிலிருந்து ராமையன்பட்டி சென்று, அங்கு பரிவேட்டை நடத்திவிட்டு மீண்டு கோயிலை வந்தடைந்தாா். தொடா்ந்து கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

படவரி பயக15டஅதஐ: வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு சந்திரசேகரராக புறப்பட்ட அருள்மிகு நெல்லையப்பா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.