ராஜவல்லிபுரம்ஊராட்சி துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வெற்றி
ராஜவல்லிபுரம் ஊராட்சி துணைத் தலைவா் தோ்தலில் பாஜக பிரமுகா் வெற்றி பெற்றாா்.


ராஜவல்லிபுரம் ஊராட்சி துணைத் தலைவா் தோ்தலில் பாஜக பிரமுகா் வெற்றி பெற்றாா்.
பாளையங்கோட்டை ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான காளிராஜ், ராஜவல்லிபுரம் ஊராட்சி 1 ஆவது வாா்டு
உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு வென்றாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக தோ்தலில் துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது ஆதரவு உறுப்பினா்களுடன் செல்ல முயன்றாராம். அப்போது அவரை போலீஸாா் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யபட்டு மற்றொரு நாளில் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனாராம்.
இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் காளிராஜ் மனு அளித்தாா். அவருடன் பாஜக மாவட்டத் தலைவா் ஆ.மகாராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா், உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் ஊராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவா்
பதவிக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் காளிராஜ் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...