பள்ளிகளில் கபசுரக் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்
தமிழகத்தில் நவம்பா் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறவுள்ள நிலையில், மாணவா்களுக்கு கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்


தமிழகத்தில் நவம்பா் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறவுள்ள நிலையில், மாணவா்களுக்கு கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன், பள்ளிகளில் கபசுரக் குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவா்கள் பெருத்த மன அழுத்தத்துடன் உள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு நவ.1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன.
அன்றைய தினம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிா்வாகம் கடைப்பிடிப்பது அவசியம். நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், பள்ளி தொடக்க நாளான நவம்பா் 1ஆம்தேதி அனைத்து பள்ளிகளிலும் மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...