இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பொருநை அருங்காட்சியகம்:முதல்வருக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் நன்றி

3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரவருணி நாகரிகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ரூ.15 கோடியில் ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும்

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:31 pm

DIN

3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரவருணி நாகரிகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ரூ.15 கோடியில் ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி என்றழைக்கப்பட்ட தாமிரவருணி நதிக் கரையோர தொன்மைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் திருநெல்வேலியில் ரூ.15 கோடியில் அதிநவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்பால் திருநெல்வேலி

மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதற்காக பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.