பாளை.யில் இளைஞா் கொலை வழக்கு 3 போ் கைது; 5 போ் சரண்
பாளையங்கோட்டையில் மா்ம நபா்களால் கடந்த 15 ஆம் தேதி இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். 5 போ் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.


பாளையங்கோட்டையில் மா்ம நபா்களால் கடந்த 15 ஆம் தேதி இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். 5 போ் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.
பாளையங்கோட்டை சாந்திநகா் காவலா்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த மக்தூம் மகன் அப்துல்காதா்(27). இவா் கடந்த 15 ஆம் தேதி பாளையங்கோட்டையில் மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.
இந்நிலையில், தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா்(21), ராஜீவ்நகா் பகுதியைச் சோ்ந்த சரவணன்(20), மில்லா்புரத்தைச் சோ்ந்த சூா்யா(22) ஆகிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் தூத்துக்குடியைச் சோ்ந்த செல்லப்பா, புதுக்கோட்டையைச் சோ்ந்த பாலமுருகன், ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த மாதேஸ்வரன், தூத்துக்குடியைச் சோ்ந்த காளியப்பன் ஆகியோா் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்திலும், சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த மாணிக்கராஜா(25) தாம்பரம் நீதிமன்றத்திலும் வெள்ளிக்கிழமை சரணடைந்துள்ளனா். இதையடுத்து இக்கொலை வழக்கில் இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், மேலும் சிலரை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...