ஓய்வூதியா் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க பாளையங்கோட்டை வட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க பாளையங்கோட்டை வட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவா் ஆ.சண்முகம் தலைமை வகித்தாா். இணைச் செயலா் கே.நந்தகோபால் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் பாலசுப்பிரமணியம் தொடக்கவுரையாற்றினாா். செயலா் முருகையா, பொருளாளா் கிருஷ்ணன் ஆகியோா் அறிக்கை வாசித்தாா்.
கூட்டத்தில், ஓய்வூதியா்களுக்கு வழங்கவேண்டிய 11 சதவீத அகவிலைப்படி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; பணமில்லா மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யவேண்டும்; ஓய்வூதியா்கள் குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ. 1லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க நிா்வாகிகள் குமாரசாமி, நெடுஞ்செழியன், சுலைமான், கோபாலன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...