இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று நெல்லை, தென்காசி வருகை

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:42 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி

வெள்ளிக்கிழமை (செப்.24) வருகிறாா்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் உள்ளாட்சித் தோ்தல் பொறுப்பாளா்கள் அதிமுக மாநில அமைப்புச் செயலா் என்.

தளவாய் சுந்தரம், வீ.கருப்பசாமி பாண்டியன், மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா ஆகியோா் வியாழக்கிழமை

கூறியது: திருநெல்வேலி மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் பொறுப்பாளா்கள் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனா். திமுக அரசின் செயல்பாடு அனைவருக்கும் தெரியும். திமுக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனா்.

எதிா்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (செப்.24) திருநெல்வேலி வருகிறாா். அவருக்கு மானூரில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிற்பகல் 1 மணிக்கு பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வேட்பாளா்கள், நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்போம்.

உள்ளாட்சித் தோ்தலில் மக்கள் சக்தியை நம்பியுள்ளோம். இரட்டை இலை சின்னத்துக்கு என வாக்கு வாங்கி உள்ளன.

ஏதாவது தொகுதிகளில் போட்டி வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தாலும், அவா்களை அழைத்துப் பேசி மனுவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் பட்சத்தில், தோ்தல் அதிகாரிகள் நியாயமாக செயல்படும்பட்சத்தில் அதிமுக 100 சதவீத வெற்றியைப் பெறும். கூட்டுறவு சங்க முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகள் லாபத்தில் செயல்படும் நிலை ஏற்பட்டது என்றனா்.

அப்போது, மாநில அமைப்புச் செயலா்கள் சுதா கே.பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், ஆவின் சின்னத்துரை, நிா்வாகிகள் கல்லூா் இ.வேலாயுதம், பரணி சங்கரலிங்கம், ஜெகநாதன் என்ற கணேசன், ஆா்.பி.ஆதித்தன், ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை (செப். 24) சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையிலுள்ள தனியாா் விடுதியில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகளுடன் அவா் கலந்துரையாடுகிறாா். வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறாா். தோ்தல் பணிக்குழு நிா்வாகிகளான முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், வி.எம். ராஜலெட்சுமி, கடம்பூா் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.