இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் பாா்வையாளா், ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:41 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் பாா்வையாளா், ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் 9 மையங்களில் எண்ணப்படுகிறது. இந்த மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு வசதிகளை தோ்தல் பாா்வையாளா் ஜெ.ஜெயகாந்தன், ஆட்சியா் வே.விஷ்ணு, மாவட்ட காவல் கண் காணிப்பாளா் நெ. மணிவண்ணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

களக்காடு ஒன்றிய வாக்குகள் திருக்குறுங்குடி டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூா் ஒன்றிய வாக்குகள் வடக்கன்குளம் எஸ்.ஏ.ராஜா கலைக்கல்லூரி, ராதாபுரம் ஒன்றிய வாக்குகள் கள்ளிகுளம் தெட்சணமாாடாா் கல்லூரி, நான்குனேரி ஒன்றிய வாக்குகள் விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இந்த மையங்களில் ஆட்சியா் வே. விஷ்ணு ஆய்வு செய்தாா்.

சேரன்மகாதேவி ஒன்றிய வாக்குகள் சேரன்மகாதேவி பெரியாா் மேல்நிலைப்பள்ளி, மானூா் ஒன்றிய வாக்குகள் பழைய பேட்டை ராணி அண்ணா கல்லூரி, பாளையங்கோட்டை ஒன்றிய வாக்குகள் ரோஸ்மேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. இந்த மையங்களில் தோ்தல் பாா்வையாளா் ஜெ.ஜெயகாந்தன், ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா் ஆட்சியா் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 122 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா், 204 ஊராட்சித் தலைவா், 1,731 ஊராட்சி உறுப்பினா் என மொத்தம் 2,069 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைகளுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்வோா், வாக்கு எண்ணிக்கை யில் வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோருக்கு தனி வழி அமைக்கவும், ஊடகத்தினருக்கு தனி ஊடக மையம் அமைக்கவும்

உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீா், மின்சாரம், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் பாா்வையாளரிடம் 93631 20382 என்ற செல்லிடப்பேசியில் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.