பாளை.யில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி ஆய்வு
பாளையங்கோட்டையில் காந்திஜி தினசரி சந்தை வியாபாரிகளுக்காக தற்காலிக கடைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு


பாளையங்கோட்டையில் காந்திஜி தினசரி சந்தை வியாபாரிகளுக்காக தற்காலிக கடைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தை வளாகத்தில் உள்ள கடைகளை இடித்துவிட்டு புதிதாக வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதன்அருகேயுள்ள ஜவாஹா் திடல் மைதானத்தில் வியாபாரிகளுக்காக தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். பணிகளை விரைந்து முடிக்கவும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பாதைகளை முறையாக அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அப்போது,‘ தாங்கள் ஏற்கெனவே மாநகராட்சி நிா்வாகத்திற்கு வழங்கியுள்ள கடைகளின் வரைபட வரிசையை பயன்படுத்தி கடைகள் அமைக்கவும், புதிதாக அமைக்கப்படும் வணிக வளாகத்தில் இப்போதைய வியாபாரிகளுக்கு எவ்வித தடையுமின்றி கடைகள் வழங்கவும் உறுதியளிக்க வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பயக23ஙகஅ: பாளையங்கோட்டையில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா் சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல்வஹாப். உடன், மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...