சட்டவிரோதமாக சரள் மண் கடத்தல்: இருவா் கைது
திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் சட்டவிரோதமாக சரள் மண் கடத்தியதாக இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் சட்டவிரோதமாக சரள் மண் கடத்தியதாக இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து தென்கலம் விலக்கு பகுதியில் தாழையூத்து போலீஸாா் வாகன சோதனையில்
ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனையிட்டனா். லாரியில் அனுமதியின்றி சரள் மண் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து கரையிருப்பை சோ்ந்த பேச்சிமுத்து (30), தாழையூத்தைச் சோ்ந்த லட்சுமணன்
(31) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். சரள் மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...