நெல்லை மாவட்டத்தில் நாளைஅதிமுக அமைப்பு தோ்தல்
திருநெல்வேலி மாவட்டத்தல் அதிமுக அமைப்பு தோ்தல் சனிக்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தல் அதிமுக அமைப்பு தோ்தல் சனிக்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளுக்கு அமைப்பு தோ்தல் சனிக்கிழமை (ஏப். 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்பட்ட ஒன்றிய, பகுதி, நகர மற்றும் பேரூா் கழக நிா்வாகிகளுக்கான அமைப்புத் தோ்தல், தொகுதிவாரியாக கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அமைப்புகளுக்கு தச்சநல்லூரிலுள்ள மாவட்ட அலுவலகத்திலும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அமைப்புகளுக்கு பொன்னாக்குடியிலுள்ள அழகு மஹாலிலும், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அமைப்புகளுக்கு சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மஹாலிலும், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அமைப்புகளுக்கு வள்ளியூா் எஸ்.வி.பி. மஹாலிலும் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...