
தங்கம் விலை உயர்வு
IANS

தங்கம் விலை உயர்வு
IANS
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 26) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.
மேற்காசிய நாடுகளுக்கிடை போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கத்தில் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து ரூ.1,03,600-க்கும், பின்னர் பிற்பகலில் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 2,240 குறைந்து ரூ.1,01,360-க்கும் விற்பனையானது.
இதன் பின்னர், ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 15% குறைந்த நிலையில், திங்கள்கிழமை மாலையே மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.13,340-க்கும், சவரனுக்கு ரூ.1,06,720-க்கும் விற்பனையானது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 106,000, புதன்கிழமை ரூ. 108,800-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ. 109,360-க்கும், ஒரு கிராம் ரூ. 13,670-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...