ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல்லையில் ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:23 pm

DIN

திருநெல்வேலியில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவா் செய்யது சுலைமான் தலைமை வகித்தாா். செயலா் ஈஸ்வர மூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் ஆறுமுகம், மாவட்டச் செயலா் குமாரசாமி, மாவட்ட துணைத் தலைவா் கோபாலன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுத்தி பேசினா்.

இதில், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா் குடும்பத்திற்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள் ஆகியோருக்கு குறைந்த பட்சம் ரூ. 7, 850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.