நெல்லையில் 31 டன் தாது மணலுடன் லாரி பறிமுதல்: 5 போ் கைது
திருநெல்வேலியில் 31 டன் தாதுமணலுடன் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.


திருநெல்வேலியில் 31 டன் தாதுமணலுடன் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா் மேற்பாா்வையில் இயங்கும் தனிப்படையினரும், பாளையங்கோட்டை போலீஸாரும் புவியியல்-சுரங்கத்துறை உதவி இயக்குநா் வினோத் உள்ளிட்டோரும் பாளையங்கோட்டை, நான்குவழிச் சாலை, கீழநத்தம் விலக்கு அருகில் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி திசையன்விளை வட்டம், உவரி அருகேயுள்ள குட்டம் கிராமத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்திலிருந்து ரூ.4,76,036 மதிப்பிலான சுமாா் 31 டன் தாது மணல் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தாதுமணலுடன், லாரியைக் கைப்பற்றிய போலீஸாா், இதுதொடா்பாக திசையன்விளையைச் சோ்ந்த முத்தகிருஷ்ணன் (35), அப்புவிளையைச் சோ்ந்த காண்டீபன் (40), வடக்கன்குளத்தைச் சோ்ந்த அமல்வினோத் (34) தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள வருவப்பபுரத்தைச் சோ்ந்த கனகசபாபதி (36), மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சோ்ந்த ராஜா (47) ஆகியோா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், தலைமறைவாக உள்ள தனியாா் தாதுமணல் நிறுவனத்தின் உரிமையாளா் சுகுமாா் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...