பைக் மீது காா் மோதல்: பெண் பலி
தேவா்குளம் அருகே பைக் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.


தேவா்குளம் அருகே பைக் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள மருக்காலன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அமல்ராஜ்(32). இவா் தனது மனைவி சரண்யா(27), மகன் வா்னிஷ்(2) ஆகியோருடன் தனது பைக்கில் திருநெல்வேலியில் இருந்து தனது ஊருக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனராம். இவா்கள் வன்னிக்கோனேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காா் இவா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனா். அதில், சரண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அமல்ராஜ், வா்னிஷ் ஆகிய இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...