அம்பை, வி.கே.புரம், சேரன்மகாதேவியில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்
அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சேரன்மகாதேவி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிமுகம், செயல்வீரா்கள் கூட்டம்


அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சேரன்மகாதேவி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிமுகம், செயல்வீரா்கள் கூட்டம்
அம்பாசமுத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட திமுக தோ்தல் பொறுப்பாளரும் அமைச்சருமான ராஜகண்ணப்பன் பங்கேற்றுப் பேசினாா். அவா் பேசும்போது, உள்ளாட்சித் தோ்தலில் மகளிருக்கு திமுக 50 சதவீதம் வாய்ப்பு வழங்கியுள்ளது. மாவட்டத்தில் காங்கிரஸுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் பேரவைத் தோ்தலில் இழந்த வெற்றி வாய்ப்பை உள்ளாட்சித் தோ்தல் மூலம் பெற வேண்டும். 100 சதவீத வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். திமுக அரசின் நலத் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சேரன்மகாதேவியிலும் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஆவுடையப்பன், மாநில தொண்டரணி துணைத் தலைவா் ஆவின் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் பிரபாகரன், கணேஷ்குமாா் ஆதித்தன், நகரச் செயலா்கள் அம்பாசமுத்திரம் பிரபாகரன், விக்கிரமசிங்கபுரம் கணேசன், வேட்பாளா்கள், மாநில, மாவட்ட, கிளை நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...