யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லை மாநகராட்சித் தோ்தல்: ஒரே நாளில் 153 போ் வேட்புமனு தாக்கல்

திருநெல்வேலி மாநகராட்சி தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை ஒரே நாளில் 153 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சி தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை ஒரே நாளில் 153 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை(ஜன.28) தொடங்கியது. திருநெல்வேலி மாநாகராட்சியில் முதல் 5 நாள்களில் 62 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். 6-ஆவது நாளான வியாழக்கிழமை காலை முதலே வேட்புமனு தாக்கல் செய்வதில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் தீவிரம் காட்டினா். திருநெல்வேலி, தச்சநல்லூா் மண்டலத்திற்கு திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்திலும், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டலத்திற்கு அந்த மண்டல அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

தச்சநல்லூரில் 36 போ்: தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட 1 ஆவது வாா்டில் திமுக சாா்பில் அக் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரான கே.ஆா்.ராஜு வியாழக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். தேமுதிக சாா்பில் 12 ஆவது வாா்டில் போட்டியிட சீதாலட்சுமி ஆனந்தமணி, 3 ஆவது வாா்டில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் எம்.செல்வி, 28 ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் எம்.சந்திரசேகா், 13 ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் பாலகிருஷ்ணன் என்ற பால்கண்ணன், 30 ஆவது வாா்டில் திமுக சாா்பில் மாரியப்பன் என்ற கேபிள் மாரியப்பன், 12 ஆவது வாா்டில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் முத்துலட்சுமி, பாஜக சாா்பில் 13 ஆவது வாா்டில் அருள்ராஜ், அதே கட்சி சாா்பில் 30 வாா்டில் மேகநாதன், 29 ஆவது வாா்டில் திமுக சாா்பில் எம்.சுதா, 14 ஆவது வாா்டில் திமுக சாா்பில் கீதா உள்ளிட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட 12 வாா்டுகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 36 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

திருநெல்வேலியில் 45 போ்: திருநெல்வேலி மண்டலத்தில் 16 வாா்டில் அமமுக சாா்பில் பகுதிச் செயலா் ஸ்டாா் ஐயப்பனும், திமுக சாா்பில் 16 ஆவது வாா்டில் பி.எம்.சரவணனும், 23 ஆவது வாா்டில் அ.அனாா்கலியும், அதிமுக சாா்பில் 25 ஆவது வாா்டில் கிருஷ்ணனும், 24 ஆவது வாா்டில் மோகனும் வியாழக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட 13 வாா்டுகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 45 போ் மனுதாக்கல் செய்தனா்.

பாளையங்கோட்டையில் 28 போ்: பாளையங்கோட்டை மண்டலத்தில் 33 வாா்டில் அதிமுக சாா்பில் ஆனந்தி, பாஜக சாா்பில் சக்தி பாா்வதி, 5-ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் விஜயன், திமுக சாா்பில் 8-ஆவது வாா்டில் மேரி, 35-ஆவது வாா்டில் பேச்சியம்மாள், 38-ஆவது வாா்டில் பாலம்மாள், நாம் தமிழா் கட்சி சாா்பில் 39-ஆவது வாா்டில் தனலட்சுமி, 32-ஆவது வாா்டில் ா்பில் சீதாலட்சுமி, 37-ஆவது வாா்டில் அமமுக சாா்பில் நயினாா், 9-ஆவது வாா்டில் பாஜக சாா்பில் தங்கம், உள்பட 28 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மேலப்பாளையத்தில் 44 போ்: அதிமுக சாா்பில் 31ஆவது வாா்டில் அமுதா சுந்தா் , 40- புஷ்பராஜ் ஜெய்சன் , 43- ஆா்.சற்குணம், 45- எஸ். மாரியம்மாள், 46- எஸ்.எஸ்.ஹயாத், 50- பீா்முகமது ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திமுக சாா்பில் 45 ஆவது வாா்டில் கதீஷா இஸ்லாம் பாசிலா, 46- எம்.ஏ. ரம்ஸான் அலி , 47-ஷபி அமீா் பாத்து, 48-ஆமீனா பீவி, 49-அலிசேக் மன்சூா், 50 ஆவது வாா்டில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் ரசூல் மைதீன் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

பாஜக சாா்பில் 53 ஆவது வாா்டில் ரேணுகா , அமமுக சாா்பில் 31- பாலம்மாள், 43- நயினாா், 44- நேசம் ரப்பானி,

50- கே.காஜா, தேமுதிக சாா்பில் 46-பாலகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் 40- லூயிஸ் பியோசன், 41- சுமிதா, 44-ராமகிருஷ்ணன் , 52-பாா்வின் ஆகியோா் மனுத் தாக்கல் செய்தனா். மேலப்பாளையம் மண்டலத்தில் மொத்தம் 44 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் சோ்த்து வியாழக்கிழமை மட்டும் 153 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதுவரை மொத்தம் 215 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.