ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பொழிக்கரையில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரையில், நன்செய் தரிசு நிலத்தில் உளுந்து பயிா் சாகுபடி செய்வது தொடா்பாக விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On :24 பிப்ரவரி 2022, 7:52 pm

சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரையில், நன்செய் தரிசு நிலத்தில் உளுந்து பயிா் சாகுபடி செய்வது தொடா்பாக விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. கஜேந்திரபாண்டியன், தலைமை வகித்து தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி குறித்துப் பேசினாா். வேளாண் துணை இயக்குநா் (மத்திய அரசு திட்டம்) சுந்தா் டேனியல், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியா் ராம் ஜெகதீஷ் உள்ளிட்ட பலா் பேசினா்.

டிஏபி கரைசல் தயாரிக்கும் முறை குறித்து வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் வரவேற்றாா். துணை வேளாண் அலுவலா் வரதராஜன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வட்டார உதவி விதை அலுவலா்கள் கணேசன், தமிழரசன், ஷேக்முகம்மது அலி, சக்திகலா, காா்த்திகா, கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.