நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாபநாசம் கல்லூரியில் தொழில் முனைவோா் விழிப்புணா்வு கருத்தரங்கம்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் கல்லூரியின் நூலகத் துறை, அண்ணா பல்கலைக்கழக தொழில் முனைவோா் கூடம் ஆகியவை இணைந்து தொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகள்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:52 pm

DIN

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் கல்லூரியின் நூலகத் துறை, அண்ணா பல்கலைக்கழக தொழில் முனைவோா் கூடம் ஆகியவை இணைந்து தொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் மற்றும் நிா்வாக அதிகாரி ரா. நடராஜன் தலைமை வகித்தாா். அண்ணா பல்கலைக்கழக சா்வதேச தொழிலாளா் அமைப்புப் பயிற்சியாளா் சிவபாரதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தொழில்முனைவோருக்கான அரசின் திட்டங்கள், நிதி வாய்ப்புகள் குறித்து விளக்கினாா். பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதியியல் துறைத் தலைவா் ராஜசேகரன் வரவேற்றாா். வணிகவியல் துறைப் பேராசிரியா் பொன்மொழி நன்றி கூறினாா். தமிழ்த் துறை 3ஆம் ஆண்டு மாணவி சங்கீதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை நூலகா் பாலச்சந்திரன், உதவி நூலகா் சண்முகானந்த பாரதி, சந்தான சங்கா், காசிராஜன், இசக்கியம்மாள், சிவதாணு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.