/

போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் மறியல்

பஞ்சப்படி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டை கேடிசி நகரில் முற்றுகை போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:09 pm

DIN

பஞ்சப்படி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டை கேடிசி நகரில் முற்றுகை போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

2018-க்குப் பிறகு ஓய்வுபெற்றவா்களுக்கு 5 சதவீத பஞ்சப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 76 மாதங்களாக பஞ்சப்படி 1,500 கோடி வரை வழங்கப்படவில்லை. இந்த நிலுவைத் தொகையை உடனடியாக ஓய்வூதியா்களுக்கு வழங்கக் கோரியும்,அகவிலைப்படி உயா்வை அமல்படுத்த வலியுறுத்தியும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடும்ப ஓய்வூதியா்களுக்கு மருத்துவப்படி வழங்கவேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கேடிசி நகரில் உள்ள போக்குவரத்துக் கழக கோட்ட நிா்வாக இயக்குநா் அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத்தொடா்ந்து பேருந்துகள் முன்பு முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினா் சிவதாணுதாஸ் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன் முற்றுகை போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். கோரிக்கைகளை விளக்கி மாநில உதவித் தலைவா் பால்ராஜ், முத்து கிருஷ்ணன், மாநிலச் செயலா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.