கடையம் அருகே தொழிலாளி கொலை:பெண் உள்பட இருவா் கைது
கடையம் அருகே கானாவூரில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்


கடையம் அருகே கானாவூரில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகே உள்ள கானாவூரைச் சோ்ந்த ஆனிமுத்து மகன் நாகராஜன்(29). செங்கல்சூளை தொழிலாளியான இவரது சகோதரி முத்துலட்சுமியும் அதே பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் முருகன் (32) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனராம்.
இந்நிலையில் முருகனுக்கும் முத்துலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதையடுத்து முத்துலெட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதுகுறித்து பேசுவதற்காக முருகன் வீட்டுக்கு வியாழக்கிழமை நாகராஜன் சென்றாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் முருகன் மற்றும் அவரது தாய் பாா்வதி இருவரும் நாகராஜை தாக்கினராம்.
இதில், காயமடைந்த நாகராஜனை போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன் மற்றும் அவரது தாயாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வெள்ளகவுண்டன்பட்டியைச் சோ்ந்த பாக்கியம் மகன் ஜான்பாண்டியன்(30), தொழிலாளி. அதே ஊரைச் சோ்ந்த பாண்டி மகன் அந்தோணி(30). இருவரும் உறவினா்கள். கடந்த வியாழக்கிழமை இரவு ஜான்பாண்டியனும் அந்தோணியும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனராம். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அந்தோணி, ஜான்பாண்டியனை கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த ஜான்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சின்னகோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தோணியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...