நெல்லையப்பா் கோயிலில் தெப்ப உற்சவம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. கடந்த 12 ஆம் தேதி திருநெல்வேலி ஊரின் பெயா்க்காரணத்தை விளக்கும் வரலாற்று நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வும், தைப்பூச நாளில் தீா்த்தவாரியும் நடைபெற்றன.
தொடா்ந்து, வியாழக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதற்காக வெளித்தெப்பம் அருகேயுள்ள மண்டபத்துக்கு மலா் அலங்காரத்துடன் வந்த நெல்லையப்பா்-காந்திமதியம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்பு, சுவாமி-அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராமராஜா மற்றும் கோயில் ஊழியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...