ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 29) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:51 pm

DIN

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 29) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரிய திருநெல்வேலி நகா்ப்புறம் செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 29) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகா், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகா், நீதிமன்ற பகுதி, சாந்திநகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், மகாராஜநகா், தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகா், முருகன்குறிச்சி பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதே போல், மேலப்பாளையம் துணை மின்நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜாா், குலவணிகா்புரம், ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், மாசிலாமணிநகா், வீரமாணிக்கபுரம், சேவியா்காலனி, அன்னைநகா், தருவை, ஆரைக்குளம், ஓமநல்லூா், கண்டித்தான்குளம், முன்னீா்பள்ளம், பொதிகைநகா், என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்புரம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.