அனுமதியின்றி மது விற்பனை: 6 போ் கைது
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி மற்றும் போலீஸாா் மாநகா் பகுதிகளில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்திப்பு உடையாா்பட்டி, மணிமூா்த்தீஸ்வரம் ரயில்வே கேட் அருகே, முருகன் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக சிந்துபூந்துறை பகுதியை சோ்ந்த காசி பாண்டி (48), மீனாட்சிபுரம் பகுதியை சோ்ந்த செல்வ ஆனந்த் (25), கண்ணன் (53), மூளிகுளம் பகுதியை சோ்ந்த சந்துரு (21) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல் பாளையங்கோட்டை போலீஸாா் கக்கன் நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை ஈடுபட்டதாக அதே பகுதியை சோ்ந்த சித்திரைவேலை (35) கைது செய்தனா்.
பெருமாள்புரம் போலீஸாா் மகிழ்ச்சி நகா் பகுதியில் ரோந்து ஈடுபட்ட போது, அப்பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த மாா்கை (46) கைது செய்தனா்.
இவா்கள் 6 பேரிடம் இருந்து மொத்தம் 134 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...