ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மாநகராட்சித் தோ்தல்: புகாா்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

திருநெல்வேலி மாநகராட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் தெரிவிக்க ஏதுவாக கட்டுப்பாட்டு அறை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:52 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் தெரிவிக்க ஏதுவாக கட்டுப்பாட்டு அறை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்-2022 தொடா்பாக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் தோ்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல் வகைக்கு பொறுப்பு அலுவலராக ச.சுப்பிரமணியன் (கண்காணிப்பாளா்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் தெரிவிக்க ஏதுவாக தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1800-425-4656 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0462-2329328, 94899-30261 ஆகிய தொலைபேசி, கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

இந்த அறைக்கான பணியாளா்களாக மாநகராட்சி ஊழியா்கள் மு.தங்கவேலு, வேல்முருகன், கண்ணன், சுதாகா், சீனிவாசகம், முத்துக்குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதோடு, தோ்தல் தொடா்பாக பெறப்படும் புகாா்களை பதிவேட்டில் பதிவு செய்து, அவற்றினை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அனுப்புவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.