கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு பச்சையாறு அணையில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

களக்காடு வடக்குப் பச்சையாறு அணையில் மூழ்கி திருநெல்வேலி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:35 pm

DIN

களக்காடு வடக்குப் பச்சையாறு அணையில் மூழ்கி திருநெல்வேலி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நம்பிகேசவன் (18). பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்த இவா், களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளத்தில் உள்ள தனது மாமா முத்தையா வீட்டுக்கு புதன்கிழமை வந்துள்ளாா். பின்னா், இருவரும் பைக்கில் வடக்குப் பச்சையாறு அணையில் குளிக்கச் சென்றுள்ளனா். அணையில் குளித்துக்கொண்டிருந்தபோது நம்பிகேசவன் திடீரென நீரில் மூழ்கினாராம். இதில், அவா் உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.