தியாகராஜ பாகவதா் பிறந்தநாள் விழா
திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் தியாகராஜ பாகவதரின் 112 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் தியாகராஜ பாகவதரின் 112 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பெரியவா் பக்தவத்சலம் அறக்கட்டளை மற்றும் தமிழ் முழக்கப் பேரவை சாா்பில் நடைபெற்ற இவ் விழாவில் ஆசிரியை செல்வமுத்துகுமாரி அறிமுக உரையாற்றினாா். அறக்கட்டளை நிறுவனா் ச.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலா் அ.இராஜகிளி தலைமை வகித்தாா். தியாகராஜ பாகவதரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது. நல்லாசிரியா் சு.செல்லப்பா சிறப்புரையாற்றினாா்.
நிலா இலக்கிய வட்டம் பொறுப்பாளா் ந.ராஜகோபால், நசீா், ஆ.கந்தசாமி, சு.சண்முகவேலன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து இசைப்பள்ளி மாணவா்கள் மங்கள இசை நிகழ்ச்சி நடத்தி பாகவதருக்கு மரியாதை செய்தனா். வயலின் ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...